Monday, March 30, 2009

பிறப்பும்!! இறப்பும்!!!


ஐந்து லட்சம் உயிரில் 
ஓர்யிராய் தரித்தவன் 
தாயின் கருவில்!!!  

இருவைந்து லட்சம் பேராய்னும் 
உன் உள்ளம் தொடுவேன் ஒரு முறையேனும்!!!

Monday, December 15, 2008

முதல் பனி (காதல்)


காற்றில் மிதக்கும் 
மெலிய சருகினினும் எடை 
குறைவானதா... ?  

நான் உன்னன
நீ என்னில் தொட‌ 
நினைத்தோம் கரைந்தோம்...  

நொடியில் பூத்து 
காற்றில் மிதந்து கையில் விழுந்து 
மறைகையில் மனதையும் கரைத்தாயே...!!!  

நிரம்மில்லை தெரிகிறாய்... 
மணமில்லை கண் சிமிட்ட... உன்னனயே பார்கிறேன்.. 
இந்த காதலை சொல்ல வார்தையில்லை  
ஆத‌னால் வடிக்கிறேன் சிலையாக...  

பனித்துளியே உன்னுடன் 
கண்டதும் காதல் ... 
கவிதைப் போல் வந்தாயே  

உன்னைக்காதலிப்பது ‍ 
நான் என்னைக்காதலிப்பது போல்....  
உன்னுடன் ஒரு நொடியேனும் வாழும் நிலை 
நினைகையில் குளிர்கிறது...

Sunday, November 9, 2008

வென்சுருட்டு




தரை தேடும் நேரம்

அது தெரிவதில்லை


அது தெரியும் நேரம் நாம்

தரையில் இல்லை!!!

அவள் உனக்கும் மேல்!!!


நிலவே மாசு மரு அற்றவளா நீ

அழகோவியம் என்று ஆண‌வமா !!!

ஒரு பொழுது மட்டும்வந்து ஒளி

வீசி செல்கிறாய் நீ !!!

முப்பொழுதும் என்னன காக்கும் இந்தியத் தாய்

உனக்கும் மேல்தான்!!!

Thursday, August 14, 2008

என்னவளே!!!


கண் மூடித்தனமாக
காதலிப்பவள்
என்ன‌வ‌ள் !!!

தன்னுள் ஆயிர‌ம்
க‌னவுகள் சும‌ப்பவ‌ள்
என்ன‌வ‌ள் !!!

நொடிக்கு ஒரு முறை
தேய்ந்தாலும் முழு நில‌வாம்
என்ன‌வ‌ள் !!!

என‌து தாய்க்குப்பின்
என‌னை சும‌ப்ப்வ‌ள்
உன‌க்கும் என‌க்கும் தாய்
என்ன‌வ‌ள் !!!

நானும் உன்னை காத‌லிக்கிறேன்
என்றும் உன்னை பிரியாமலிருப்பேன்
என்ன‌வ‌ளே !!!

என்ன‌வ‌ள் இந்தியத் தாய்

வந்தே மாதரம் !!!

Saturday, May 10, 2008

ந‌ன்றி!!!


மழை மேகம்
சேகரித்த நீர்ப்போல
உன் அடிவயிற்றில்
துளித்துளியாய்
உயிர் கொடுத்தாய்
நீ என்க்கு !!!

என் மேல்
சிறுத்துறும்பும்
விழாம‌ல்
க‌வ‌ச‌ம் கொண்டாய்
விழித்திரையாய்

நான் உயிர் வாழ‌
துடிக்கும் உன் இத‌ய‌த்திற்கு
ந‌ன்றி !!! ‍ - இது வெறும்
வார்த்தையாய் விழ‌வில்லை
உன‌க்காக‌ துடிக்கும் ‍- என்
இத‌ய‌தின் ஒலியாய்
அன்னையே !!!

Friday, April 4, 2008

நீ


  • இரு இதழ்கள் மட்டுமே
    கொண்ட காலப் புத்தகம் ‍ நீ
  • உன்னை ரசித்து படிக்கும்
    ரசிகன் நான்.