Monday, December 10, 2007

நிழல் !!!



கண்ணாடி முன் !!!
இளமையான
என் தந்தையின்
பிம்பம் _ நான் !!!


நிழ‌ல் நீ !!!
உன்னுடைய‌ மற்றோரு
நிஜ‌ம் _ நான் !!!

Wednesday, November 28, 2007

எத்தனை முகங்கள் !!!


என்ன செய்யவில்லை நீ எனக்கு
நான் சும்மாகூடக் கேட்கவில்லை
என்ன வேண்டுமென்று !!!

கைபிடித்து நீயும் எழுதக்கற்றுக்
கொடுத்தாய்; கவிதை
பாடும் வண்ண‌ம் கல்வியும் தந்தாய் !!!

கண்ணில் காதல் மலர
திக்கித் திணறி நின்றேன்
நானிருக்கிறேன் என்று தோழியாக நின்றாய்!!!

உன்னை பார்க்கமுடியாமல் நான் தவிக்க‌
என்னை பார்த்துக் கொண்டுதான் நீ
இருக்கிறாய் அக்கறையோடு !!!

எத்தனை முகங்கள் உனக்கு
வியந்துதான் போகிறேன் அம்மா !!!

Wednesday, October 24, 2007

அறியாபெண்ணே !!!


மண்ணில் நீ பிறந்ததை _ முதலில்
அறியாள் உன் அன்னை !!!

நீயும் உன் தாய்ப்
போலதானடி பெண்ணே !!!

உன் உள்ளதில் பூத்த
காதல் அறியாதவளாய் !!! !!!

பகல் நிலவு !!!


இது என்ன அதிசயம் !!!

பகலில் நிலவு ‍_ அதுவும் செவ்வண்ண நிலவு

ஓ!! அது உன் இதழா !!!

Thursday, October 18, 2007

மறுபிறப்பு!!!.

என் உயிர் துறப்பேன்!
நீ உன் இதயக்கருவறையில்
உயிர் தருவாயெனில்!!!